Wednesday, August 26, 2009

பழக இனிமை ! பணியில் நேர்மை !

இடம் : நுங்கம்பாக்கம் ,சென்னை.

நேரம் : இரவு 01:30

கிழமை : மீண்டும் சனி (இம்முறை சற்று மூர்க்கமாக!)

தமிழ் படங்களின் தாக்கம் என்னுள் உச்சத்தை அடைந்து ,நொந்து ,மீண்டும் கீழ் நோக்கி விரைந்து கொண்டிருந்த காலம். சென்னையில் ஒரு IT கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தேன்.கல்லூரி நண்பர்களுடன் ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தேன். சில நண்பர்களை வார இறுதியில் தான் பார்க்க முடியும் . மற்ற நேரங்களில் கவுண்டர் பாணியில் "நா ரொம்ப பிஸி" என்பர். பொதுவாக Bachelors மத்தியில் "சனி இரவு காய்ச்சல்" (Saturday Night Fever) மிகுந்து காணப்படும். பலர் சரக்கு அடித்து பரவச நிலைக்குத் தள்ளப்படுவர்.அந்த பழக்கம் இல்லாத சிலர் நல்ல ஹோட்டல் போய் நன்றாக மொக்கி விட்டு திரையரங்கிற்குச் சென்று தலைவிதியே என்று ஏதேனும் தமிழ் படத்தைப் பார்பர். இதில் முதலில் குறிப்பிட்ட பழக்கம் இல்லாததால் நான் இரண்டாம் ரகம்.
அன்று இரவு நானும் , எனது நண்பன் அய்யப்பனும் தீபாவளி வெளியிடான "சிவகாசி" படத்திற்கு போகலாம் என்று முடிவு செய்து "உதயம்" திரையரங்கிற்குச் சென்றோம் ."சிவகாசி" அய்யப்பனின் சொந்த ஊர்,அதனால் சிறிது குஜாலுடன் காணப்பட்டான். படத்தின் இயக்குனர் பெயரை போஸ்டேரில் தேடினேன் ."பே .....ரரசு". "ஐயோ ! சும்மாவே இவன் "Somersault" அடிப்பான், தீபாவளினா கண்டிப்பா திருவிழா கொண்டாடாமவிடமாட்டான்" என்று மனதை திடப்படுத்திக் கொண்டு ஒரு மூன்று மணி நேர ஆயுள் தண்டனைக்கு தயாரானேன்.மணி ஒலித்தது."வாடா ! போலா !" என்றான் ஐயப்பன்.உள்ளே சென்றோம்.
படம் தொடங்கியது. ஓடியது,ஓடியது,ஓடிகொண்டே இருந்தது . மூன்று மணிநேரத்திற்கு பிறகு ! மணி 12:30.திரை அரங்கினை விட்டு வெளியே வந்தேன் சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில். அவ்வாறு இருந்தது அப்படம். "படம் செம சூப்பர் டா ! படத்தோட பெயர் அப்படி " என்று ஊர் பெயர் சொல்லி மார்தட்டிக் கொண்டான் ஐயப்பன்."சரி விடு டா ! இப்போ என்ன ப்ரோக்ராம் " என்றேன்.உடனே என் நண்பன் பிரேமிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு ."மச்சி ! எங்க இருக்கடா !" என்றான்."இப்பதான்டா படம் முடிஞ்சிது " என்றேன். "அப்போ எங்க வீட்டுக்கு வந்துருடா ! எவளோ நேரம் ஆகும் ?" என்றான். அய்யப்பனிடம் அனுமதி வாங்கிவிட்டு "பிரேமு ! இன்னும் முப்பத்து நிமிஷத்துல அங்க இருப்போம்டா " என்றேன்."சரிடா ! வந்துட்டு கால் பண்ணு !"என்றான்.
இருவரும் ஆட்டோவில் ஏறி பிரேமின் அபார்ட்மென்ட் நோக்கி சென்றது கொண்டிருந்தோம்.மணி இரவு 1. அபார்ட்மென்ட் வாசலை அடைந்தோம். எனது உயர வாசல் கதவு சங்கிலியால் பூட்டபட்டு இருந்தது."பிரேமு ! வந்துடோம்டா !" என்று தொலைபேசி மூலம் அழைத்தேன்." 2 நிமிஷம் மச்சி" என்றான். நானும் ,அய்யப்பனும் ரோட்டை அளந்து கொண்டிருந்தோம்."மச்சி ! என்னடா இன்னும் ஆள காணல !" என்று கதவு மேல ஏறுவது போல் படம் போட்டேன். "பொறுடா ! வருவான் !" என்றான் ஐயப்பன். "டேய் ! எனக்கு பிஸ் வருது டா ! நா போய் டவுன்லோட் பண்ணிட்டு வரேன்டா " என்று ஓரமாய் ஒதுங்கினேன்.திடீரென்று சாலையில் மாநகர காவலர்கள் ஜீப் ரோந்து வண்டு கொண்டிருந்தது .ஐயப்பன் அபார்ட்மென்ட் முன் நிற்பதை பார்த்தவுடன் வண்டியை நிறுத்தினர்." டேய் ! இங்க வாடா !" என்று மிக மரியாதையுடன் அய்யப்பனை அழைத்தனர். அவனை அழைத்ததைக் கண்டவுடன் எனக்கு பிஸ் நின்றுவிட்டது."என்னடா ! உனக்கு தனியா வெத்தல பாக்கு வைக்கணுமா ! வாடா " என்று என்னையும் அழைத்தனர். "ஆஹா ! இன்று சனி சடுகுடு ஆட ஆரம்பித்து விட்டது " என்று என்னுள் ஒரு எண்ணம் . " என்னடா பண்றீங்க இங்க , மணி ஒன்னு ஆச்சி " என்றார் ஏட்டு ஒருவர் . "சார் ! friend வீடு இங்க இருக்கு சார் ,அவன் உள்ளருந்து வந்துட்டு இருக்கான் சார் " என்று வார்த்தைக்கு வார்த்தை சார் போட ஆரம்பித்தேன்."ஆமாடா ! இன்னைக்கு friend வீடுன்னு சொல்லிட்டு அவன் வீட்டுக்கு போவீங்க ! நாளைக்கு அவன் எங்ககிட்ட வந்து "செல் போன் காணல ! underwear காணலனு எங்ககிட்ட வந்து கம்ப்ளைன்ட் குடுத்து எங்க தாலிய அறுப்பான்.இதுவே உங்களுக்கு வேலைய போச்சு ! ஏறுங்கடா வண்டியில " என்று மிரட்டினார்.அதுவரை விஷயத்தின் வீரியத்தை உணராத எனக்கு அடிவயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது. எனது கற்பனை குதிரையின் ஓட்டம் படுவேகமா இருந்த காரணத்தால் என் கண்முன் ஒரு கற்பனை திரை தோன்றியது.அதில் நானும் ,அய்யப்பனும் ஜெயிலில் underwearருடன் அடி வாங்கும் காட்சி.இதில் ஐயப்பன் அடி வாங்கி துள்ளி குதிப்பதைப் பார்த்து எனக்கு சிரிப்பு வேற." சுயநினைவுக்கு மீண்டும் வந்தேன் ."டேய் ! பிரேமு! 2 நிமிஷத்துல வரேன்னு சொன்னியேடா !! எங்கடா போனே " என்று மனதிற்குள் கதறினேன்.
"ஏறுங்கடா! உள்ள! " மீண்டும் உறுமல் எங்களை உலுக்கியது . "சார் ! நாங்க IT கம்பெனியில வொர்க் பண்றோம் சார் . படம் பார்த்துட்டு வரோம் சார். வேணும்னா விசிடிங் கார்ட பாருங்க சார் " என்றேன். " ஓஹோ ! நீங்க தான் 20 வயசில 40 ஆயிரம் சம்பளம் வாங்குரவங்களா !! உங்களுக்கெல்லாம் சம்பாதிக்கிறோம்கிற மப்புடா !"என்றார் . கழுத்திற்கு கத்தி நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன் . "பேசாம ரெண்டு பெரும் மூடிட்டு வண்டிக்குள்ள ஏறுங்க" என்று வாயை பொத்தி சைகை செய்தார் .அதுவரை அமைதியாய் இருந்த ஐயப்பன் சிறிது கிளர்ச்சி அடைந்தான்."எதுக்கு சார் ! நாங்க வரணும் . நாங்க என்ன தப்பு செஞ்சோம் .! அதெல்லாம் வர முடியாது "என்று எகிறினான். கண நேரத்தில் ஐயப்பனின் சட்டை காலரை கைப்பற்றினார் ஏட்டு."சர் !! சர்க்!! டர் !!" என்று சட்டை காலர் கிழியும் சத்தம்." என்னடா ! சின்ன பையன்னு பாத்த ரொம்ப துள்ற !! அப்படியே பொடதியில ஒன்னு போட்டேன்னு வை மவனே ! ஏறு டா உள்ள !" என்றார். இதைக் கண்ட என் கண்கள் சிவந்தன ! ரத்தம் கொதித்தது ! நரம்புகள் முறுக்கேறின !"இந்தியன் தாத்தா முதல் முதல்வன் வரை அத்தனை கதாபாத்திரங்களும் என்னை உள்ளிருந்து உந்தித்தள்ளின. ஆனால் ஐயப்பன் சட்டை காலர் கிழிந்த சத்தம் மீண்டும் மீண்டும் என் காதில் "சர்!!சர்க்!!டர் !" என்று ஒலித்து கொண்டே இருந்தது . அமைதியாக வண்டிக்குள் சென்று அமர்ந்து கொண்டேன்.உடனே ஏட்டு அய்யப்பனை பார்த்து "பாத்தியா ! அந்த பையன ! சொன்ன உடனே உள்ள போய் இருக்கான் . நீயும் போபா தம்பி" என்றார். ஐயப்பன் என் அருகில் அமர்ந்தான் . அவனது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. வண்டி மெதுவாக நகர பிரேம் ஒரு முண்டா பனியன் ,ஒரு லுங்கியுடன் வெளியே எங்களை தேடிக் கொண்டிருந்தான். என்னை அறியாமல் "மச்சி " என்று வண்டிக்குள் இருந்து கைக்காட்டினேன். “டேய் ! என்னடா போலீஸ் வண்டியிலயே லிப்ட் வாங்கிட்டு வந்துடீங்களா !" என்று சொல்லிக்கொண்டு ஓடிவந்தான்."யாருபா நீ " என்றார் ஏட்டு ." சார் ! இவங்க என் friends " என்றான் பிரேம்."சரி போலீஸ் ஸ்டேஷனக்கு வந்து லெட்டர் எழுதி குடுத்திட்டு ரெண்டு பேரையும் கூட்டிட்டு போ !" என்றார். வண்டி வேகமாக நகர்ந்தது .அருகில் ஐயப்பன் அழுதுகொண்டிருந்தான்.எனக்கோ மனதில் எண்ண ஓட்டங்கள். சாலையில் நான்கு இளைஞர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.அவர்களிடமும் காவலர்கள் அதே மிரட்டலை விடுத்தார்கள். அவர்கள் ஏதோ புரியாத வடநாட்டு மொழியில் "மங்கீசா ! கிங்கீசா ! கிங்கீசா ! பாயாசா !" என்று பதில் அளித்தனர். உடனே ஏட்டு "விடு. வண்டில எடமில்ல !! ஒழுங்கா வீடு போய் சேருங்கடா !" என்றார். எனக்குள் பெரும் அதிர்ச்சி .அட பாவிகளா ! இது தெரிந்திருந்தா நம்மளும் நமக்கு தெரிந்த ஹிந்தி ல " ஏக் காவ் மெய்ன் ஏக் கிசான் ரகுதாத்தா !" என்று பேசி தப்பி இருக்கலாமோ ?" என்று எண்ணினேன். ஆனால் எனது திராவிட நிறமும் ,என் முகத்தில் தாண்டவமாடும் தமிழன் என்ற ரேகையும் கண்டிப்பாக எனக்கு தர்ம அடி வாங்கிக் கொடுத்திருக்கும் என்பது உறுதி. வண்டி ஸ்டேஷன் அடைந்தது . எங்களின் அங்க அடையாளங்கள் எழுதப் பட்டது .சரியாக ஒரு மணி நேரம் கழித்து பிரேம் வந்தான். கம்ப்ளைன்ட் எழுதிய பிறகு எங்களை அழைத்து செல்ல அனுமதித்தார்கள்."சார் ! பேரை வச்சி ஒன்னும் பண்ணிடாதீங்க சார் !" என்றேன் ."அட ! இதெல்லாம் சும்மா ஒரு கணக்கு காட்டுறதுக்கு தா !! வேற ஒன்னும் இல்ல ! சரி கொஞ்சம் பாத்து செஞ்சிட்டு போங்க " என்றார் ஏட்டு . எதிரே இருந்த போர்டு டை நானும் பிரேமும் நோக்கினோம் அதில் "சென்னை மாநகர காவல் நிலையம் " முதல் வரியில் . இரண்டாம் வரியில் "பழக இனிமை !! பணியில் நேர்மை !" . இது என்ன கொடுமை என்று நினைத்துக்கொண்டு பிரேம் ஒரு நூறு ரூபாய் கொடுத்தான் .உடனே போட்டார் ஒரு மாஸ்டர் சலுட் .பணம் பேசுகிறது. மணி 3 . பிரேம் வீட்டிற்க்கு வந்து நிம்மதியாக பிஸ் அடித்து விட்டு தூங்க ஆரம்பித்தேன் .
காலை 10 மணி செல் போன் அலறியது.அழைப்பு என் நண்பன் ரங்கராஜன் திருநெல்வேலியில் இருந்து. "சொல்றா !" என்றேன் தூக்க கலக்கத்தோடு ."என்னடா ! நேத்து நைட் தியேட்டர் ல ஏதோ பொண்ணுங்ககிட்ட சில்மிஷம் பண்ணிடீங்கலாமே ! போலீஸ் stationனுக்கு போநேங்கலாமா ? ! எப்படியோ History ல வந்துடீங்க டா !" என்றான் . எழுந்து பார்த்தேன். பிரேமும் ,அய்யப்பனும் அருகில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள் ."கிரி" வடிவேலு பாணியில் " அட பாவிகளா ! நைட் புல்லா நம்ம கூட தான இருந்தானுங்க ! அதுக்குள்ள எப்படி மேட்டர் திருநெல்வேலி வர போச்சி " என்ற அதிர்ச்சியுடன் "அட ! அது ஒன்னும் இல்ல மச்சி நேத்து நைட்."என்று முழு கதையையும் அவனிடம் சொல்ல ஆரம்பித்தேன் சின்ன புன்சிரிப்போடு. Download As PDF

13 comments:

  1. lol..:-) super eh iruku boss...
    Intha story Unmaiya illa unga karpanaya ? ... keep posting... apdiye terror eh ethavathu blog podunga...thrilling eh irukanum..

    ReplyDelete
  2. ஏதோ சில விஷயங்கள் சென்சார் பண்ணன மாதிரி ஒரு பீல்....

    ReplyDelete
  3. மிகவும் நன்றாக உள்ளது. கற்பனை கலந்து சொல்லியிருக்கும் விதம் அருமை. மேலும் உங்கள் நினைவுகள் இங்கு பதியட்டும். தல கலக்கிட்டீங்க.....

    ReplyDelete
  4. machi... ithu unmaya nadanthadha??? prem epadi da thairiyama police station vandhaan!!!

    ReplyDelete
  5. மாப்ள என்ன டா..
    படம் பாக்க முன்னாடி இது நடந்திருந்தா, 3 மணி நேரம் அந்த தியேட்டர்ல இருந்ததுக்கு நீங்க ஸ்டேஷன் லையே இருந்திருக்கலாம்..
    இதுக்கு தான் பல பேர் பரவச நிலைக்கு போயிடறாங்கன்னு தெரியுதா..
    நல்லா இருக்கு மச்சி... இனி அடுத்த சனி கதையில் (இன்னும் சற்று கொடூரமாக) நீ பொது மாத்து வாங்கிய கதை ஆவலுடம் எதிர்பார்க்கபடுகிறது ;)
    )

    ReplyDelete
  6. டை மச்சி நான் சைக்கிள் டு ஹோன்டாய் கார் வரை போயருக்கன். ஆனால் வாழ்கையில ஒரு முறையாவது போலீஸ் வண்டில போனும் தாண்ட என் லச்சியம் ஆசை. நீ ரெம்ப கொடுத்து வைச்சவன் டா .

    இதுக்கு தாண்ட என்ன மாதிரி தொப்பை வைக்கணும் . தொப்பை வைச்சா நானும் போலீஸ் ன்னு சொல்லி தப்பிச்சிருக்கலாம்

    டை மடைனுக்கலா இந்த நூறு ருபாஇய முதலிய கொடிதிருந்தா சட்டை காலர் க்ளிஞ்சிருக்கது

    ReplyDelete
  7. பேர்அரசு மானத்தை வங்கிட்டங்கிலட . ஒரு பஞ்ச் டிலகுஎ க்குடா சொல்லாம வந்துஇட்டைகிலட .

    வடிவேல் மாதிரி நானும் ரவிடி டா வண்டியுல ஏத்து டான்னு சொல்லாம சின்ன பிள்ளை மாதிரி சீ சீ சீ சீ ஐயோ ஐயோ

    ReplyDelete
  8. Thala kalakitinga ponga.. summa athiruthulaa!!! ennama twist vachurikinga.. kadaisila antha ponnukaaga thaan police station ponadha marachitingaley thala..


    Expecting more from u...

    ReplyDelete
  9. ஹாய் நண்பா... அருமையான கரு கொண்ட பதிவு. மெல்லிய எள்ளல் தொனி பதிவில் பரவிக் கிடக்கின்றது. அருமை. இன்னமும் நீயும் நானும் மற்றும் ஆரம்ப நிலையில் இருக்கும் அமெச்சூர் பிளாக்கர்களும் ஒரு பொதுவான நடையையே பின்பற்றுகின்றோம். க.சீ.சிவக்குமார் கதை படிப்பது போல் உள்ளது.இது என் எண்ணமே ,தவறாக இருக்கவும் வாய்ப்புள்ளது. எப்போது நமக்கு தனி நடை வரும் என்று தெரியவில்லை.
    இருப்பினும் இது மிகச் சிறந்த முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை.

    keep posting a lot.. keep on posting.. expect more form you.

    ReplyDelete
  10. machi...aduthu unudaya release "vichiq ...VichiQ"kodambakathil nadantha oru iravu katchi....(GILMAAAAAAAAAA)

    ReplyDelete
  11. நண்பா, நல்லா இருக்கு. Write the blog based on the real incidents, அப்ப தான், படிக்குறவங்களுக்கு interesting-அ இருக்கும்.
    All the best. உங்கள் சேவை நம்முக்கு தேவை.

    ReplyDelete
  12. Hello pravin,

    After reading your "Theivakkutram" wrote this comment.

    Really the way u have written is very good.
    You will become a good tamil story writer.

    Mannikkavum tamizhil vimarsanam panna mudiyathathuku.


    Anbudan nanban,
    Suresh K

    ReplyDelete