Friday, August 7, 2015

ஓர் இரவு,ஓரு பெண்,ஓரு பேருந்து.

இடம் : ஏபிடி Travels சூப்பர் டீலக்ஸ் ஏசி பேருந்து.

நேரம் : மாலை 5.49

கிழமை : திங்கள்

ரம்ஜான் விடுமுறைக்காக நான்கு நாட்கள் எனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பெங்களூர் திரும்பிக்கொண்டிருந்தேன். எனது வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏறி எனது தாய் தந்தையருக்கு டாட்டா காட்டிவிட்டு தனியார் பேருந்து நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தேன் 15 நிமிஷப் பயணம். பேருந்து நிலையத்தில் ABT பெங்களூர் பஸ் ஜபர்தஸ்தாக நின்றுக்கொண்டிருந்தது.. எனது கைபேசியில் "A" என்ற எண்ணை அழுத்தி "ஹலோ!!! நா பிரவின் " என்றேன். "ஆ! சொல்லுப்பா பஸ் ஸ்டாண்ட் போய்டியா " என்றார் என் தந்தை. "ஆமா ! இப்பதான்!" என்றேன்." இந்தா அம்மா பேசுதா " என்று சொல்லி என் அம்மாவிடம் போனைக் கொடுக்க "ஹலோ !! சொல்லும்மா !" என்றேன்." நல்ல சாப்டுப்பா!! " என்றார் என் அம்மா."ஹ்ம்ம் ! பாத்துகிறேன் " என்றேன். " இனி எப்போ வருவே "என்று கேள்வி வர சிறிது கடுப்பாகி "யம்மா ! இப்ப தான போறேன் ! வருவேன் அடுத்த மாசம் போதுமா!" என்றேன். " ஆ! சரி ! அப்போ போன வச்சிரவா" என்றார்." ஹ்ம்ம் !" என்று பதில் சொல்லிக்கொண்டே பஸ்ஸில் ஏறினேன்.
பஸ்ஸில் நடுவில் ஜன்னல் ஓர சீட்டில் ஒரு பெண் இருப்பதைப்போல் தோன்றியது. வேறு எவரும் பஸ்ஸில் இல்லாததால் அப்பெண் தனியாகத் தெரிந்தாள். எனது கண்கள் சிறிது அகலமாகி தனது குவித்திறன் அனைத்தையும் அப்பெண் மீது செலுத்தியது. இருந்தாலும் கண்டும் காணாததுமாக எனது சீட்டை தேடினேன்."16,17,18" 18 எனது சீட். அப்பெண் அமர்ந்திருப்பது சீட் நம்பர் 19. அருகில் சென்று உற்று நோக்க "ஐயோ !! அய்யய்யோ ! ஐயோ !! அய்யய்யோ ! " என்ற தமிழ் பாடல் கற்பனையாக ஓலிக்க எனக்கு மட்டும் பனிக்கட்டி மழை பெய்தது. அப்பதுமை மிக மிக அசாதாரண அழகு. பனியில் குளித்த ரோஜா மலரைப் போல பிங்க் நிறத்தில் மின்னினாள். பார்ப்பதற்கு தமிழ் பெண் போல தெரியவில்லை.கண்டிப்பாக வடநாட்டுப் பெண் என்பதை அவள் முகம் சொல்லியது. ஒரு பிங்க் நிற T - ஷர்ட் , நீல ஜீன்ஸ் பேன்ட், ஒரு ஜெர்கின் அணிந்திருந்தாள். காதில் ஒரு I-POD , கையில் ஏதோ புத்தகம் வைத்து படித்துக்கொண்டிருந்தாள். இவை அனைத்தும் காண நேர Scanனில் கிடைத்த அற்புதத் தகவல்கள். சற்று இயல்பு நிலைக்குவந்தாலும் சிறிது பதற்றத்துடன் "Well ! May I sit here? " என்று ஒரு பீட்டரோடு ஆரம்பித்தேன். அவள் தனது I-POD யை காதில் இருந்து விலக்கி "வாட் ?" என்று கேட்க , "May I sit here?" என்றேன் மீண்டும். நீங்கதானே இந்த சீட் புக் பண்ணிருக்கீங்க?"என்று எனது கேள்வி அம்பை வளைத்து இன்னொரு கேள்வியாக என்னிடம் ஏவினாள். அட பொண்ணு நல்லா தமிழ் பேசுதே !" என்று மனதில் எண்ணிக்கொண்டு,"இல்ல ! நான் இங்க உக்காந்தா உங்களுக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இல்லையே?" என்றேன்."I dont have any ? Do you ? " என்று அமெரிக்க ஆக்சன்ட்டுடன் ஒரு கேள்வி மீண்டும். "ஓகே ! நோ ப்ரோப்லேம்" என்று முடித்துக்கொண்டேன். எனது பையை மேல வைத்துவிட்டு பஸ்ஸை விட்டு கீழே இறங்கி சிறிது வெளியே உலாவலாம் என்று நடந்தேன். " டேய் பிரவினு !! பொண்ணு செம Bold போல தெரியுது !! நீ Bold ஆகிடாதே!! Be careful" என்று மணி அடித்தது என் மனசாட்சி. சரி இப்பொழுது இந்த விஷயத்தை நண்பர்கள் யாரிடமாவது சொல்லவேண்டுமே என்று எண்ணி என்து நண்பன் "ராஜு" வை இந்த வயித்தெரிச்சலுக்கு தேர்ந்தெடுத்து அவனை என் கைபேசியில் இருந்து அழைத்தேன்."என்னடா ! ராஜு ! என்ன பண்றே? " என்றேன். " இல்ல மச்சி ! செம tired அதான் தூங்கிட்டு இருக்கேன் " என்றேன்."ஒ ! மச்சி இப்போ தான்டா ஊருக்கு கிளம்பீட்டு இருக்கேன்." என்றேன். "ஒ ! எப்போ வருவே ?" என்றான். "நாளைக்கு காலைல வந்துருவேன் டா" என்று சொல்லி " மச்சி ! இன்னொரு விஷயம் ! பஸ்ல என் சீட்டுக்கு பக்கத்துல ஒரு செம பிகர் டா " என்று சொன்னது தான் தாமதம் எதிர்முனையில் ஒரு சிறு அதிர்வு . நான் நினைத்ததை விட அவன் வயிறு 5 டிகிரி அதிகமாவே எரிந்தது . " "என்னடா சொல்ற "என்றான். " உண்மையிலே மச்சி ! சூப்பர் பொண்ணு டா !" என்றேன்." டேய் மச்சி கலக்குடா !! நீ ரொம்ப குடுத்து வச்சவேன் டா . கண்ணுக்கு தெரியாம ஏதோ ஒரு உச்சத்துல ஒரு மச்சம் இருக்குடா உனக்கு !" என்றான். " மச்சி ! நம்மெல்லாம் "TERROR" தெரியும்ல ! எந்த பொண்ணுக்கும் அசர மாட்டோம் " என்று ஜெர்குடன் பேசினேன். " நிறுத்துடா ! உன் சவடால ! நீ பாப்பநாயக்கன் பாளையத்து பாட்டிய பாத்தாலே பம்முவ ! இப்போ பளிங்கு மாதிரி ஒரு பொண்ணு பக்கத்துல இருக்கு !! பாவம்டா அந்த பொண்ணு " என்றான். " டேய் ! மவனே ! ரொம்ப பேசாதே ! நா travel ல இருக்கேன் போன் பண்ணி disturb பண்ணாதேன்னு சொல்றதுக்கு தான் போன் பண்ணேன். இப்போ போன வச்சிடுறேன்"என்றேன். " எலேய் !! நடத்துடா ! நடத்து !" கடைசில நீ இங்க தா வந்தாகணும் " என்று தொடர்பை துண்டித்தான்.
சிறிது முடியை சரிசெய்து கொண்டு பஸ்சிற்குள் ஏறினேன். பேருந்து நிறைந்து இருந்தது. நேராகச் சென்று எனது சீட்டில் அமர்ந்தேன். அப்பெண் ஒரு சிறு கண் சிமிட்டல் கூட இல்லாமல் புத்தகத்தை குறுகுறுவென்று உற்று நோக்கிப் படித்துக்கொண்டிருந்தாள். சற்று குனிந்து புத்தகத்தின் பெயரை நோக்கினேன் "La habitación de Fermat" என்று எழுதியருந்தது. என்ன மொழிப் புத்தகம் என்று எட்டிப் பார்க்க அது ஆங்கிலப் புத்தகமில்லை என்று மட்டும் தெரிந்தது. ஓகோ ! மேடம் Multilingual போல ! என்று நினைத்துக்கொண்டேன்.ஆனால் அப்புத்தகத்தின் பெயர் எனக்கு சிறிது பரிட்சயமான பெயர் போலத் தோன்றியது. பேருந்து பெங்களூர் நோக்கி விரைந்தது. முதல் 2 மணி நேரம் இருவருக்கும் இடையே ஒரு மயான அமைதி. பேருந்து விருதுநகரை அடைந்தது. மகிழ்ச்சியாக ஜன்னல் வழியே வெளியில் நோக்கினேன் சிறிது ஆர்வத்தோடு. அப்பெண் எனது நடவடிக்கைகளை நோக்கி , தனது I-POD யை காதில் இருந்து விலக்கி,"wat happend ? எதாச்சி ப்ரோப்லேம்மா? இப்படி வெளியே பாக்குறீங்க!". அதெல்லாம் ஒண்ணுமில்ல ! இங்க தான் நாலு வருஷம் முன்னாடி நான் இன்ஜினியரிங் படிச்சேன்" என்றேன். " Oh ! so you are not a student now ?" என்று சொல்லிச் சிரிக்க ஆரம்பித்தாள். ஆகா ! நம்மள சின்னப் பையன் லிஸ்ட் ல சேர்த்து டா போல " என்று மனதில் நினைத்துக்கொண்டு ,"நோ ! நோ ! நா பெங்களூர் ல சாப்ட்வேர் Enginer " என்றேன். " இஸ் இட் ? Big Job ! Big Money ! !" என்றாள். நான் பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தேன். " நீங்க நாகர்கோவிலா ?" என்று முதல் நங்கூரத்தை நாட்டினேன். "இல்ல ! My native is " சொல்லி நிறுத்திக்கொண்டு " ஹ்ம்ம்!! I m அஞ்சனா ! நா பெங்காலி. அம்மா நாகர்கோவில். அப்பா கொல்கத்தா. பெங்களூர் ல பேஷன் டிசைன் படிச்சிட்டு இப்போ மைசூர் ல AD கம்பெனில வொர்க் பண்றேன். இப்போ பாட்டியை பார்க்க நாகர்கோவில் வந்தேன்.." அப்புறம் ! என்று ஆரம்பித்து இடைவிடாமல் அரைமணிநேரம் அவளது பள்ளி,கல்லூரி,தோழிகள்,ஆண் நண்பர்கள் என்று அவளது குறும் வரலாற்றை சொல்லி முடித்தாள். அவளை பற்றி சொல்லும் போது அவளது கண்கள் விளையாடின. கைகளோ ! காற்றில் அபிநயம் புரிந்தன. எனக்கோ அவள் கூறிய "I m அஞ்சனா ! நா பெங்காலி " தவிர வேறு எந்த வார்த்தையும் காதில் விழவில்லை. காரணம் அவளின் அழகு. "இப்போ நீங்க சொல்லுங்க " என்று போட்டாள் ஒரு பிரேக். நான் என்னைப் பற்றி சொல்ல ஆரம்பிதேன். சொல்லிகொண்டேயிருகையில் "ஜஸ்ட் எ min! தமிழ் நாடு ரொம்ப ஹாட் யார் !" என்று சொல்லிக்கொண்டே அவள் ஜெர்கின்னை கழற்றினாள். நானும் " ஆமா !! ரொம்ப ஹாட் தான் " என்று எனது ஜெர்கின்னை கழற்றினேன். 2 வினாடி கழித்து "அடப்பாவி ! இருக்கிறது AC பஸ்... !! தமிழ்நாடு ஹாட்டா ? அவ சொன்னங்கிறதுக்காக தமிழ்நாட்ட கவுத்துபுட்டயேடா !" என்று மணி அடித்து என் மனசாட்சி இரண்டாம் முறை. ஆம் ! அழகான பெண் அருகில் இருக்கையில் அது ஆண்டவனாக இருந்தாலும் அவனது ஆறு அறிவும் வேலை செய்யாது என்பது ISI முத்திரைக் குத்தப்பட்ட அக்மார்க் உண்மை. நான் மட்டும் என்ன விதிவிலக்கா ?" மீண்டும் எனது உரையாடலைத் தொடர்ந்தேன். ஒருவாறாக என்னைப்பற்றி சொல்லிமுடித்தேன். " சோ ! உனக்கு puzzles நா Interest " என்றாள். " ஆமா !! " என்றேன். "ஓகே ! அபோ ஒரு சின்ன கேம் . இந்த ஸ்பானிஷ் ஸ்டோரி புக்ல 5 puzzles இருக்குது . நீ answer பண்றயா பாப்போம் " என்றாள். ஆப்பைத் தேடி அருமையாக அமர்ந்துகொண்டாயேடா பிரவினு ! தமிழ் விடுகதை கேட்டாலே தடுமாறுவே ! இதுல ஸ்பானிஷ் வேற இன்று நமக்கு சங்கு தான் " என்று ஒரு எண்ணம். " ஓகே ! அந்த புக்க ஒரு நிமிஷம் குடுங்க " என்று வாங்கி திறந்துப் பார்க்க "FERMAT"S ROOM " என்று மட்டும் ஆங்கிலத்தில் எழுதிஇருந்ததை பார்த்தவுடன் எனது மூளையில் 1000 watts பல்பு எரிந்தது. இப்படத்தை நான் முன்பே பார்த்திருக்கிறேன். "ஹ்ம்ம் !! கடவுள் இருக்கான் குமாரு !!" என்று மனதில் நினைத்துக்கொண்டு சிரித்தேன். பேருந்து ஒரு இடத்தில சற்று நின்றது." டீ !! காபி ! சாப்டறவங்க சாப்டலாம் ! வண்டி காமணிநேரம் நிக்கும் " என்று கூவினான் ஒரு சிறுவன். " ஹே !! மொடேல் வந்துடுச்சி ! காபி சாப்டலாமா ?" என்றேன். " ஓகே ! " என்றாள். கீழே சென்றோம். "டீயா ? காபியா ?" என்றேன் . " டீ " என்றாள். " அண்ணா ! ஒரு டீ , ஒரு காபி !" என்று கூறி திரும்பிய எனக்கு அதிர்ச்சி. அவள் புகைவண்டிபோல் புகை விட்டுக் கொண்டிருந்தாள். இதனை சற்றும் எதிர்பார்க்காத நான் டீயை வாங்கி அவளிடம் கொடுத்தேன். "ஹே !! யு வான்ட் " என்று சிகரட்டை என்னிடம் நீட்டினாள். " எனக்கு பழக்கமில்லைங்க !" என்றேன். எனது கைபேசி அதிர்ந்தது. ராஜு calling . சிறிது தூரம் தள்ளி சென்று " சொல்றா ராஜு" என்றேன். " என்னடா நடக்குது அங்க ?" என்று அவன் வினவ " ஹ்ம்ம் !! சிவபூஜை நடக்குது ! சோ " என்றேன். சிறிது கடுப்பாகி . அப்போ என்ன கரடின்னு சொல்லாம சொல்றயா ? " என்றான் . " மச்சி உனக்கு கற்பூர புத்திடா அப்போ நீ கண்டிப்பா கழுதை இல்ல ! " என்று சொல்லி சிரிக்க ."நல்ல இருடா ! நல்ல வாழு !" என்று தொடர்பைத் துண்டித்தான். மீண்டும் அவளை நோக்கிச் சென்றேன். சிகரெட் முழுவதுமாக முடிந்திருந்தது. "ஹே ! நா போய் சாக்லேட் வாங்கிட்டு வரேன் " என்று சொல்லிக்கொண்டு இரண்டு Diarymilk வாங்கி வந்தாள். " யு டேக் ஒன் " என்று என்னிடம் நீட்டினாள். " இல்லைங்க ! சாக்லேட் பிடிக்காது " என்றேன். இந்த பதில் அவள் சிகரட் புகைத்ததைக் கண்டத்தின் வெளிப்பாடு. பேருந்து மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தது. போட்டியும் ஆரம்பமானது. அவளின் முதல் கேள்வி மூன்று பல்பு பற்றியது. எனக்கு முன்னரே தெரிந்த விடையை சொல்லத் தயாரானேன். எனது சிறு மூளை சிறிது சிணுங்க எனக்குள் ஒரு எண்ணம். " பெண்கள் விரும்புவது முதல்முறை மட்டும் தோற்கும் ஆண்களையே தவிர எப்போதும் தோற்கும் ஆண்களை அல்ல !" என்று யாரோ ஒரு "பெண்"மீகவாதி உதிர்த்த தத்துவம் ஞாபகம் வர சிறிது யோசிப்பதை போல் பாவலா செய்து விட்டு "ஹ்ம்ம் !! நோ ஐடியா " என்று சொன்னது தான் தாமதம் . அவளுக்கு பெரும் மகிழ்ச்சி . ஆண் வர்க்கத்தையே தோற்கடித்தது போல பலமாகச் சிரித்தாள்." ஓகே ! I will tell the answer " என்று விடையை சொன்னாள். கேள்வி இரண்டு ஆரம்பமானது. மீண்டும் சிறு யோசனையோடு சரியான பதிலைச் சொல்ல அவள் முகம் சுருங்கி சிவந்தது. எனினும் "ஹே ! குட் யார் !! ரைட் answer " என்று சொல்லி மாற்ற கேள்விகளையும் கேட்க அனைத்திற்கும் சரியான பதில் அளித்தேன். இறுதியில் " ஹே ! you are good in Puzzles " என்றாள்." தேங்க்ஸ் ! பாய்ஸ் ஆர் பாய்ஸ் !" என்று காலரை தூக்கினேன் . உடனே கல கலவென சிரித்தாள். எனக்கோ தமிழ் நாட்டின் மானத்தையே காத்த மாதிரி ஒரு பெருமிதம். உரையாடல் தொடர்ந்தது. திடீரென்று மணி பார்க்க "4.30" என்று காட்டியது. ஆகா !! இன்னும் 2 மணி நேரத்தில பெங்களூர் வந்துருமே கொஞ்ச நேரம் தூங்கலாமா ! என்று எண்ணி " ஹே ! உங்களுக்கு தூக்கம் வரல ? " என்றேன். " என்ன ! உனக்கு இப்போ தூக்கம் வருதா ?" என்றாள் மிக மரியாதையுடன். " ஆமா ! என்று சொல்லி பல் இளித்தேன். " ஓகே ! Really Had a nice time with you ! wats ur contact number பிரவின் ?" என்றாள். நம்பர்கள் பரிமாறிக்கொண்டோம். "சரி நீ தூங்கு ! நானும் தூங்குறேன் " என்றாள்.
காலை மணி 06.35 பேருந்து பெங்களூரை அடைந்தது. நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது." ஓகே அஞ்சனா ! will meet sometime later " என்றேன்." sure ! Ring me when you get some time " என்றாள். " Bye சொல்லிவிட்டு எனது வீட்டை நோக்கிச் சென்றேன். வீட்டை அடைந்தவுடன் ஜெர்கினை கழட்டற உள் பையில் ஒரு DiaryMilk இருந்தது . அதனுடன் ஒரு தாள் " To a Nice Chap " என்று . சிறிது புன்முறுவல் பூத்தேன். மீண்டும் கைபேசி "ராஜு calling ". "சொல்றா ராஜு ! காலையில இருந்து உனக்கு எவளோ நேரம் ட்ரை பண்றேன் தெரியுமா " என்றேன், " மண்ணாங்கட்டி ! என்னலாம் பேசினடா நேத்து நைட்" என்றான் காண்டாக. " என்னடா மச்சி இப்படில பேசுற !! யு ஆர் பெஸ்ட் Friend da " என்று சொல்லி சிரித்தேன். எதிர்ப்பக்கம் சிறு அமைதி . சரி சீக்கிரம் ரெடி ஆயுடு ஆபீஸ்ல மீட்டிங் இருக்குது " என்றான். " Thats குட் பாய் !! இன்னும் பத்து நிமிஷம் ரெடி ஆயுடுவேன்" என்றேன். " சரி அந்த பொண்ண ஒரு போட்டோ எடுத்தியா டா ! " என்று கேட்டான். " போடா ! @#%& ! காலங்காத்தலயே உனக்கு என் வாயால சுப்ரபாதம் கேக்கணுமா " என்று ஆரம்பிக்க , " சரி ! விடு ! சீக்கிரம் ரெடி ஆகு" என்று சிரித்துக் கொண்டே போனை வைத்தான்.

பி.கு : இந்த பதிவினை அஞ்சனாவின் அனுமதி பெற்ற பிறகே வெளியிடுகிறேன்.... அவளுக்கு தமிழ் படிக்கத்தெரியாது என்ற அசாத்திய நம்பிக்கையில் ...!!
Download As PDF